Allnews : ���������-������������������������������-������������������������������������������-������������������������63
Welcome Guest! Have a informative day

ஒரு தலைபட்சமாக செயல்படுகிறாரா எடப்பாடி?

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக களம் இறங்கி வேலை பார்த்தவர்கள் என பட்டியல் போட்டு, அ.தி.மு.க.,வினர் பலர் மீதும், நடவடிக்கை எடுத்து வருகின்றனர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்; இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும்.ஆனால், அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையிலும் கூட, தைரியமாக எடுக்கப்படவில்லை என, சொந்தக் கட்சியினரே, எடப்பாடி பழனிச்சாமியையும், பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.இது குறித்து, அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கட்சி விரோத நடவடிக்கைக்காக முன்னாள் எம்.எல்.ஏ.,வும் மாவட்ட செயலருமான கலைராஜன், திருநெல்வேலி பாப்புலர் முத்தையாஉள்ளிட்ட கட்சியினர் பலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்த பதவிகளும் பிடுங்கப்பட்டு, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் பார்த்திபன், வெற்றிவேல், தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரை கட்சிப் பொறுப்புகளில்இருந்து நீக்கியிருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கவில்லை. எதற்காக அவர்கள் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருந்தாலும், கட்சி விரோத செயல்பட்டிருந்தார்கள் என்றால், அவர்களையும் கட்சியை விட்டு நீக்குவது தானே இயற்கை. அதை செய்யாமல், ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது, கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு பிடிக்கவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்....