இஸ்லாமாபாத்: நல்லெண்ண அடிப்படையில், 145 இந்திய மீனவர்களை, பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.அரபிக் கடலில் சர்வதேச கடல் எல்லை நிர்ணயிக்கப்படாததால், அங்கு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இரு நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட, 291 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக, பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன்படி, 145 மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். கராச்சி சிறையில் உள்ள அவர்கள், ரயில் மூலம் லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, வாஹாவில் ......
145 மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்