Allnews : ராஜஸ்தானில்-சாலைவிபத்து-புது-மாப்பிள்ளை-உட்பட-4-பேர்-பலி
Welcome Guest! Have a informative day

ராஜஸ்தானில் சாலைவிபத்து: புது மாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலைவிபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட 4பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்றது. திருமணம் முடிந்து மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர் ஒரு காரில் சொந்த ஊருக்கு திரும்பினர். பிகானர் என்ற பகுதி அருகே வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த புது மாப்பிள்ளை ஜகத்பால் சிங், அவரது உறவினர்கள் சந்தீப்குமார், ரகுவீர்சிங், சுபாஷ் ஜாட் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், காரில் பயணித்த ஐந்து பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருமணம் முடிந்து வீடு திரும்பிய புது மாப்பிள்ளை விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது....