Allnews : நாளை-இந்திய-ஜப்பான்-உச்சி-மாநாடு
Welcome Guest! Have a informative day

நாளை இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு

ஆமதாபாத்: இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இவரது மனைவி ஆகியோர் குஜராத் சென்று அங்கு பல்வேறு முக்கிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் உடன் சென்றார்.அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே , இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் ஆமதாபாத் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சிதி சையீத் என்ற 16-ம் நூற்றாண்டு பழமையான மசூதி ஒன்றிற்கு ஷின்சோ அபே அவரது மனைவி , மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சென்றனர். தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்ற அபே பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் ஜப்பானிய மொழியில் கையெழுத்திட்டார்.நாளை இந்திய-ஜப்பானிய 12-வது உச்சி மாநாடுய நடக்கிறது. பின்னர் இருநாடுகளிடையே வர்த்தகம், உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அபே வருகையின் முக்கிய நிகழ்வாக இந்தியாவில் ஜப்பான் நிதியுதவியுடன் முதன்முறையாக புல்லட் ரயில் திட்டம் துவக்கப்பட உள்ளது....