Allnews : சிலரின்-தவறான-எண்ணத்தால்-அதிமுகவுக்கு-சோதனை-தினகரன்
Welcome Guest! Have a informative day

சிலரின் தவறான எண்ணத்தால் அதிமுகவுக்கு சோதனை: தினகரன்

சென்னை: தினகரன் அளித்த பேட்டி: 5 அல்லது 6 பேரின் தவறான எண்ணங்களால் அதிமுகவுக்கு பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. யாருக்கோநீங்கள் கைகட்டி பணி செய்யும் காரணத்தினால் உங்களுக்கு ஆர்கே நகர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். 5, 6 பேரை தவிர மனதளவில் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள். அமைச்சர்களும் எம்எல்ஏக்களும், அதிமுக யார் பக்கம் என்பது தெரிந்தாலும் பதவிக்காக அங்கு இருப்பார்கள்.கட்சி எங்களுடன் தான் இருக்கிறது உங்களுக்கு தெரியும்.தோல்விக்கு பிறகு பதற்றத்தில் என்ன செய்கிறீர்கள் என உங்களுக்கு தெரியவில்லை. உங்களை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.5 6 பேர் திருந்துங்கள் இல்லையென்றால் மக்கள் திருத்திவிடுவார்கள். தலைமை கழகம் என்பது வெறும் கட்டடம். அந்த உயிரோட்டமான தொண்டர்கள் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களும், உங்களால் பயனடைந்தவர்கள் மட்டுமே அங்கு உள்ளனர்நம்பிக்கை ஓட்டெடுப்பு வரும் போது எங்கள் தரப்பு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள்.எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஜன.,20க்குபிறகு தீர்ப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்....